Last Updated : 27 Nov, 2019 04:16 PM

 

Published : 27 Nov 2019 04:16 PM
Last Updated : 27 Nov 2019 04:16 PM

-1 டிகிரிக்கும் கீழே உறைந்த மலைகள்: இமாச்சலில் பள்ளிகள் விடுமுறை; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

பனியில் உறைந்துகிடக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் கல்பா பகுதி மலைப்பிரதேசம் | படம்: ஐஏஎன்எஸ்

சிம்லா

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. பனிப்பொழிவுக் காட்சிகளை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த வாரம் மழையும் பனியும் ஒரே நேரத்தில் பொழியத் தொடங்கியது. இதனால் மாநிலத்தின் சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, சிம்லா, சோலன், கின்னவூர், மற்றும் லஹால்-ஸ்பிட்டி ஆகிய எட்டு மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவுக்கும் கடந்த வாரம் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கல்பா சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சிக்காக பனியால் போர்த்தப்பட்டதாக வானிலை அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை வரை மாநிலத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும்.

இதனால் மலைப்பகுதிகளில் அதிக இடங்களுக்குச் செல்வதற்கு முன் சாலை நிலைமைகளைச் சரிபார்க்க வாகன ஓட்டிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இடைப்பட்ட மழையுடன் மிதமான காற்று வீசுவதால் மாநில தலைநகரில் மக்கள் நடுங்கினர், குறைந்தபட்ச வெப்பநிலை 4.7 டிகிரி செல்சியஸில் இருந்தது. மணாலியில் 3.8 டிகிரி செல்சியஸ் பதிவானது.

சிம்லா மற்றும் மணாலி நகரங்களில் முறையே 9 மி.மீ. மற்றும் 2 மி.மீ. மழை பெய்தது. சிம்லாவிலிருந்து 65 கி.மீ.தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான குஃப்ரி மற்றும் நர்கண்டா, இங்கிருந்து 65 கி.மீ. தூரத்தில் கீலாங் மைனஸ் ஆறு டிகிரி செல்சியஸ் மாநிலத்தில் குறைந்த அளவு குளிரும் லேசான பனிப்பொழிவும் இருந்தன.

கின்ன கின்னாவூர் மாவட்டத்தில் சிம்லாவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள கல்பா 32 செ.மீ. பனிப்பொழிவு கண்டுள்ளது, குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு அதிகாரிகள் கூறுகையில், ''சோலன், நஹான், பிலாஸ்பூர், உனா, ஹமீர்பூர் மற்றும் மண்டி போன்ற மாநிலத்தின் கீழ் பகுதிகளில் மழை பெய்தது. -1 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. லஹால் மற்றும் ஸ்பிட்டி, சம்பா, குலு, கின்னாவூர் மற்றும் சிர்மவூர் மாவட்டங்களின் உயரமான பகுதிகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மிதமான பனியை அனுபவித்து வருகின்றன.

மேற்குப் பகுதியில் இருந்து இடையூறுகள் விலகும் என்பதால் வியாழக்கிழமைக்குப் பிறகு வானிலை வறண்டு இருக்கும். மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி), கின்னாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு -1 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்'' என்று தெரிவித்தனர்.

கின்னாவூரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, மாவட்டத்தின் கல்பா மற்றும் பூஹ் தொகுதிகளில் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று கின்னாவூர் மாவட்ட துணை ஆட்சியர் கோபால் சந்த் தெரிவித்தார்.

தற்போது வீடுகளின் கூரைகள், சாலைகளில் உள்ள கார்கள், மரங்கள் மற்றும் புதர்கள் அனைத்தும் துணை ஜீரோ வெப்பநிலையில் புதிய, வெள்ளைப் பனியின் போர்வையில் மூடப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய சுற்றுலாத் தலமான கல்பா, பனியின் போர்வையால் மூடப்பட்டிருக்கிறது, இது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியின் அலைகளை உருவாக்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x