Published : 22 Aug 2015 11:00 AM
Last Updated : 22 Aug 2015 11:00 AM
பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து வரும் கடிதங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் தங்கள் கேள்விகளை ஆல் இந்தியா ரேடியோவுக்கு கடிதம் மூலம் அனுப்பிவருகின்றனர். இந்நிலையில் அண்மைக் காலமாக இந்நிகழ்ச்சிக்காக பிரதமருக்கு பொதுமக்களிடமிருந்து வரும் கேள்விக் கடிதங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் தகவல் கோரியிருந்தது. கடந்த ஜூலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு எப்படி இருந்தது என்பது குறித்த தகவலை 'தி இந்து' கோரியிருந்தது. ஆல் இந்தியா ரேடியோவுக்கு வரும் கடிதங்களின் நிலவரம் பற்றி மட்டுமே தகவல் கோரப்பட்டிருந்ததே தவிர ஆன் லைனில் உள்ள ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை.
தி இந்து-வுக்கு கிடைத்த தகவலின்படி, "கடந்த டிசம்பர் 14-ம் தேது நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5,972 கடிதங்கள் வந்தன. அதன் பிறகு இந்த எண்ணிக்கையிலான கடிதங்கள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கிடைக்கவில்லை.
அதறு அடுத்தப்படியாக கடந்த ஜனவரி 27-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா - பிரதமர் மோடி கூட்டாக கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு 993 கடிதங்கள் கிடைத்தன.
இந்த இரு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மக்களிடமிருந்து வரும் கடிதங்களின் அளவு பெருமளவில் குறைந்திருக்கிறது. ஜூலை 26-ம் தேதி கார்கில் திவஸ் தினத்தன்று பிரதமர் பேசிய நிகழ்ச்சிக்கு வெறும் 993 கடிதங்கள் மட்டுமே வந்திருந்தன.
இது குறித்து ஆல் இந்தியா ரேடியோ அதிகாரிகள் கூறும்போது, "பிரதமர் நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறையவில்லை, இருப்பினும் இந்நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் கடிதங்கள் ஏன் குறைந்தன என்பதற்கான காரணம் தெரியவில்லை" என்றனர்.
உ.பி.,க்கு முதலிடம்:
பிரதமர் நிகழ்ச்சிக்கு வந்த கடிதங்களில் பெரும்பாலானவை உ.பி.யில் இருந்தே வந்திருந்தன. கடந்த டிசம்பரில் 910 கடிதங்கள் உ.பி.யில் இருந்து வந்திருந்தன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம் மாநிலம் இருக்கிறது. குஜராத் மாநில மக்கள் இந்நிகழ்ச்சிக்கு கடிதம் அனுப்புவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT