Published : 24 Nov 2019 03:41 PM
Last Updated : 24 Nov 2019 03:41 PM
எனக்கு அரசியலில் நுழைய ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் இப்போது அதன் ஒரு பகுதியாக நான் இருப்பதால் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய வானொலி நிகழ்ச்சியில், என்சிசி (தேசிய மாணவர் படை) குழுவுடன் உரையாடினார். அப்போது தான் மாணவனாக இருந்தபோது என்சிசி அணிப்பிரிவில் இருந்ததை மோடி நினைவுகூர்ந்தார்.
வானொலியில் என்சிசி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்து கூறியதாவது:
தங்கள் என்சிசி நாட்களை நினைவுகூர முடியுமா?
பள்ளிப் பருவத்தில் நான் ஒரு விதத்தில் மிகவும் ஒழுக்கமாக இருந்தேன். என்சிசி மாணவன் என்பதால் நான் எப்போதும் தண்டிக்கப்படவில்லை. ஒரே ஒருமுறை ஒரு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தண்டிக்கப்பட்டேன். அது எதற்காக என்றால் என்னுடைய காத்தாடிக் கயிற்றில் ஒரு பறவை சிக்கிக்கொண்டது. மரத்தில் ஏறி அப்பறவையை கத்தாடி கயிற்றிலிருந்து விடுவித்தேன்.
நான் மரத்தில் ஏறியதைப் பார்த்தவர்கள் தவறாக புரிந்துகொண்டு கண்மூடித்தனமாக என்னை அடித்தனர். நான் ஒரு பறவைக் காப்பாற்றினேன் என்ற உண்மை தெரியவந்தபோது அவர்களே என்னை பாராட்டினர்.
தங்களுக்கு தொலைக்காட்சியைப் பார்க்கவும் புத்தகங்களைப் படிக்கவும் நேரம் கிடைக்குமா?
எப்போதும் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. திரைப்படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இல்லை, மிகக் குறைவாகவே டிவி பார்க்கிறேன். நான் முன்பெல்லாம் நிறைய புத்தகங்களைப் படித்தேன்.
ஆனால் இந்த நாட்களில் என்னால் படிக்க முடியவில்லை, கூகிள் காரணமாக, வாசிப்பு பழக்கம் மோசமடைந்துள்ளது, ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பைத் தேட விரும்பினால், உடனடியாக ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடிப்பீர்கள். எல்லோரையும் போலவே, என்னுடைய சில பழக்கவழக்கங்களும் கெட்டுப்போயின.
நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இல்லாதிருந்தால், நீங்கள் என்னவாக இருந்திருப்பீர்கள்?
"இப்போது இது மிகவும் கடினமான கேள்வி, ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து செல்கிறது. சில நேரங்களில் சிலர் இப்படி ஆக விரும்புகிறேன், அப்படி ஆக விரும்புகிறேன் என்றெல்லாம் நினைப்பார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் அரசியலில் நுழைய ஒருபோதும் விரும்பியதில்லை. அது பற்றி நான் ஒருபோதும் நினைத்ததுமில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமில்லை. பிற்காலத்தில் அரசியலில் சேருவோம் என்றெல்லாம்கூட நினைத்ததில்லை. நான் என்னவாகப் போகிறேன் என்று யோசித்துப் பார்த்ததுகூட கிடையாது.
ஆனால் இப்போது அவர் ஒரு அரசியல்வாதி என்பதால், நாட்டின் நலனுக்காக நான் எவ்வாறு பணியாற்ற முடியும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
இப்போது, நான் எங்கிருந்தாலும், நான் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும், நான் முழு மனதுடன் என் நாட்டிற்காக உழைக்க வேண்டும். நான் இப்போது இந்த நோக்கத்திற்காக மட்டுமே என்னை அர்ப்பணித்துள்ளேன்.
டிசம்பர் 7 கொடிநாள் வருகிறது. நாம் அனைவரும் தேசத்திற்காக பணியாற்றும் நமது ராணுவ வீரர்களை நன்றியோடு நினைவுகூர்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி வானொலி நிகழ்ச்சியில் என்சிசி மாணவர்களுக்கு பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT