Published : 18 Nov 2019 10:33 AM
Last Updated : 18 Nov 2019 10:33 AM
பெங்களூரு
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம் என முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று முன் தினம் பெங்களூருவில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
எனது தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கர்நாடக வரலாற்றில் யாரும் செய் யாத அளவுக்கு ரூ. 48 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தேன். விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி, அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டேன். ஆனால் பாஜகவின ரின் தூண்டுதலால் எங்கள் கட்சி யினரே எனக்கு எதிராக மாறினர்.
எனது அரசை கவிழ்த்த 17 எம்எல்ஏக்களில் 16 பேர் பாஜகவில் இணைந்துவிட்டனர். வாக்களித்த மக்களுக்கும், கட்சித் தலைமைக் கும் துரோகம் செய்த இவர்களை அரசியலில் இருந்தே அப்புறப் படுத்த வேண்டும். குறிப்பாக மஜதவில் இருந்த விஸ்வநாத், நாராயண கவுடா, கோபலய்யா ஆகிய மூவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இதற்கு மஜத தொண்டர்கள் ராணுவ வீரர்களைப் போல பணியாற்ற வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல் படவில்லை. ஆனால் ஊடகங்கள் அவ்வாறு சித்தரிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT