Published : 18 Nov 2019 08:34 AM
Last Updated : 18 Nov 2019 08:34 AM
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாது காப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பரை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்து ழைப்பை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத் தினர்.
ஆசியான் கூட்டமைப்பு (10 நாடு கள்) மற்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ஏடிஎம்எம்-பிளஸ்) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு அமைச் சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தோ-பசிபிக் பிராந்திய பாது காப்பு நிலவரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை பலப் படுத்துவது உள்ளிட்ட விவகாரங் கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டரோ கொனோ ஆகியோரை ராஜ்நாத் சிங் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். எஸ்பருடனான சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ராஜ்நாத் ட்விட்ட ரில், “அமெரிக்க அமைச்சருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான பாது காப்பு ஒத்துழைப்பை பலப்படுத்து வது குறித்து ஆலோசித்தோம்” என பதிவிட்டுள்ளார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை அடைந் துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT