Published : 30 Oct 2019 11:55 AM
Last Updated : 30 Oct 2019 11:55 AM

ஆந்திரா, தெலங்கானாவில் பலத்த மழை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக, ஆந்திரா மற்றும் தெலங் கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம், குண்டூர், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரு கிறது. இதேபோல், ராயலசீமா மாவட்டங்களான சித்தூர் மாவட் டத்தில் திருப்பதி, திருமலை, காளஹஸ்தி, சித்தூர் ஆகிய நகரங் களில் தொடர் மழை பெய்து வரு கிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர். இந்நிலையில், மேலும் 3 நாட் களுக்கு மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள் ளது. மேலும், மீனவர்கள் வியாழக் கிழமை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x