Last Updated : 16 Jul, 2015 08:50 AM

 

Published : 16 Jul 2015 08:50 AM
Last Updated : 16 Jul 2015 08:50 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலைக்கு அனுமதி கோரிய விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்கியது அரசு

மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கைப் பேரிடரால் பயிர்கள் சேதமடைந்ததற்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வழங்கப்படாததால், தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி 7 விவசாயிகள் மனு அளித் திருந்தனர். உடனடியாக அவர்களுக் கான நிவாரணத்தொகையை அளித் துள்ளது மாவட்ட நிர்வாகம்.

கடந்த 2014-ம் ஆண்டு பனிப்புயல் மற்றும் பருவம் தப்பிய கனமழை காரண மாக மகாராஷ்ட்டிரத்தில் ஆயிரக்கணக் கான ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிக் கப்பட்டன. இதனால், விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை அறிவித்தது. ஆனால், அந்தத் தொகை பெரும்பா லான விவசாயிகளைச் சென்றடைய வில்லை. எனவே, கடனில் தத்தளித்த 3 பெண்கள் உட்பட 7 விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த வழியில் லாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. மனுவை விசாரித்த வார்தா மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் சாஹில் உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயி களின் வங்கிக் கணக்குகளில் நிவார ணத் தொகையை செலுத்த உத்தர விட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டோம். அந்த விவசாயிகளின் சரியான வங்கிக் கணக்கு விவரம் மாவட்ட நிர்வாகத் திடம் இல்லை. எனவேதான் பிரச்சினை எழுந்தது. தற்போது பிரச்சினை முழு மையாக தீர்க்கப்பட்டு விட்டது. இவ் விவசாயிகளுக்கு பயிர் சேதத்தைப் பொறுத்து ரூ.9,000 முதல் ரூ.13,000 வரை நிவாரண உதவி வழங்கப்பட் டுள்ளது” என்றார்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நட வடிக்கையை விதர்பா ஜன் அந்தோலன் சமிதி வரவேற்றுள்ளது. அதன் தலைவர் கிஷோர் திவாரி கூறும்போது, “7 விவசாயிகளின் உயிரைக் காப் பாற்றிய ஆட்சியரின் நடவடிக்கையை வரவேற்கிறோம். மற்ற விவசாயி களின் கோரிக்கையையும் இதே சிரத்தையோடு அணுகி, அவர்களின் உயிரையும் காப்பாற்றுவார் என நம்புகிறோம். அமராவதி மண்டலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 300 கோடி வழங்கப் படாமல் உள்ளது” என்றார். ஜூலை மாதத்தில் மகாராஷ்டிரத்தில் இதுவரை 27 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x