Published : 14 Oct 2019 05:05 PM
Last Updated : 14 Oct 2019 05:05 PM

அம்பானி, அதானியின் ஒலிபெருக்கி பிரதமர் மோடி: ராகுல் காந்தி கடும் சாடல்

சண்டிகர்

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்கலாம் விரைவில் முடிவடைகிறது. இந்த இரு மாநிலங்களிலும் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவை த் தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஹரியாணாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குபாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், பகுஜன் சமாஜ் என பலமுறை போட்டி நிலவுகிறது.

ஹரியாணாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆதரவு திரட்டினார். நூஹில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுகிறார். சாதாரண மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை. மக்கள் பணத்தை பிடுங்கி நாட்டின் பெரும் பணக்கார்கள் 15 பேருக்கு கொடுக்கிறா்கள்.

பிரதமர் மோடி மட்டுமல்ல ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டாரும் இதை தான் செய்கிறார். பொதுத்துறை வங்கி பங்குளை விற்பனை செய்யும் இவர்கள் தங்களை உண்மையான தேசபக்தர்கள் என கூறிக்கொள்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்த நாட்டு மக்கள் ஜாதி, மதம், மொழியின் பெயரில் பிரித்தாள நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஒற்றுமை படுத்துகிறது. பிரதமர் மோடியை ட்ரம்பம், அம்பானி போன்றவர்களுடன் தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் சேர்த்து பார்க்க முடியாது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x