Published : 01 Oct 2019 10:57 AM
Last Updated : 01 Oct 2019 10:57 AM

வயநாடு போக்குவரத்து தடை விவகாரம்: கேரள முதல்வருடன் டெல்லியில் ராகுல் காந்தி சந்திப்பு 

புதுடெல்லி
கேரள முதல்வர் பினராயி விஜயனை டெல்லியில் இன்று சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மழை வெள்ளம் நிவாரணம் குறித்தும், வயநாடு இரவு போக்குவரத்து தடை செய்யும் திட்டம் பற்றியும் விவாதித்தார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, கேரளாவில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால், அம்மாநிலத்தின் கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பேரிடர்களுக்கு 125 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் அதிகம் பாதித்த வயநாட்டில் அந்த தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, பார்வையிட்டார். முகாம்களில் தங்கியிருந்த மக்களையும் அவர் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகளை கேரள அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள கொச்சின் ஹவுஸ் இல்லத்தில் அவரை ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார்.

அப்போது மழை வெள்ளம் நிவாரணம் குறித்தும், வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது பற்றியும் பினராயி விஜயனுடன் விவாதித்தார்.

பின்னர இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:

கேரள மழை வெள்ள பிரச்சினை குறித்து பினராயி விஜயனுடன் விவாதித்தேன். வயநாடு தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 766 வழியில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யும் விவகாரம் குறித்து விவாதித்தோம். மாற்று வழியில் போக்குவரத்தை இயக்குவது பற்றியும் இருவரும் பேசினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x