Published : 07 Sep 2019 07:36 AM
Last Updated : 07 Sep 2019 07:36 AM
பெங்களூரு
சந்திரயான்-2 தரையிறங்கும்போது தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று காலை மீண்டும் சந்தித்து பேசவுள்ளார்.
'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார்.
அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார்.
லேண்டர் தரையிறங்குவதை காண இஸ்ரோ வந்திருந்த பிரதமர் மோடி, சிக்னல் துண்டிக்கப்பட்டதால் 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' . தைரியமாக இருங்கள் என இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டினார். இந்நிலையில் இன்று காலை இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் வருகை தர உள்ளார். இன்று காலை 8 மணியளவில் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT