Published : 05 Sep 2019 04:45 PM
Last Updated : 05 Sep 2019 04:45 PM

ரஷ்ய பயணம்; பழசும், புதுசும்: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ரஷ்ய பயணக்குழுவில் தான் இடம் பெற்றிருந்ததை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.


கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றுள்ளார்.
இதில் புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் வழித்தொடர்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், தகவல் தொடர்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி வியாழக்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை இன்று (வியாழக்கிழமை) ரஷ்யாவின் விளாதிவோஸ்டக்வில் சந்தித்தார். மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவையும் சந்தித்து பேசினார்.


இந்தநிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ரஷ்ய பயணக்குழுவில் தான் இடம் பெற்றிருந்ததை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

— Narendra Modi (@narendramodi) September 4, 2019


அதில், ‘‘நினைவுகளும், நிகழ்வுகளும் 2001 மற்றும் 2019. 20வது இந்திய -ரஷ்யா உச்ச மாநாடு இன்று நடைபெறுகிறது. ஆனால் எனது மனம் 2001-ம் ஆண்டை சுற்றிசுழல்கிறது. அப்போது பிரதமர் அடல்ஜி தலைமையில் இந்திய குழுவினர் வந்திருந்தனர். அதில் குஜராத் முதல்வராக நானும் இடம் பெற்றிருந்தேன். அது எனக்கு கிடைத்த மரியாதை’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x