Published : 16 Jul 2015 08:56 AM
Last Updated : 16 Jul 2015 08:56 AM
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 474 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.27,000 கோடி) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
கடற்படைக்காக நீண்ட தொலைவு ரோந்து விமானங்கள், 428 வான்பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை போயிங் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதற்கு, பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடை பெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டு உச்ச வரம்பு கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. அதேசமயம் உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் உற் பத்தியை அதிகரிப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு போயிங் நிறுவனத்திடமிருந்து பி-81 ரக விமானங்களை வாங்கவும், அதன் பிறகு மேலும் புதிதாக 4 விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் பி-81 ரக விமானங்கள் 7 தருவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 8-வது விமானமும் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக தனது நட்பு நாடான ரஷ்யாவிடம்தான் இந்தியா அதிக அளவு ராணுவ தளவாடங் களைக் கொள்முதல் செய்யும்.
அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகையின்போது 10 ஆண்டு பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் கையொப்பமான பிறகு, அமெரிக்காவிடம் மிக அதிகமான ராணுவ தள வாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT