Published : 10 Aug 2019 04:42 PM
Last Updated : 10 Aug 2019 04:42 PM
மைசூர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஹசன் - மங்களூரு பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் 23-ம் தேதி 10 ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஷக்லேஸ்பூர் - சுப்ரமண்ய சாலை இடையே ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 30 இடங்களில் நிலச்சரிவுகள், பாறை உருண்டு விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆங்காங்கே தண்டவாளங்களில் மரம் முறிந்து விழுந்து கிடக்கின்றன.
இந்நிலையில், மாநில அரசு அடுத்த 2 நாட்களுக்கு மழை இருப்பதாக முன்னறிவிப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த மார்க்கத்தில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண் 16515 யெஷ்வந்த்பூர் - கார்வார் ரயில், ரயில் எண் 16516 கார்வார் - ஹெஷ்வந்த்பூர் ரயில், ரயில் எண் 16511 / 16513 கே.எஸ்.ஆர். பெங்களூரு - கண்ணூர் / கார்வார் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16517/16523 கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து செல்லும் கண்ணூர் / கார்வார் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16512/16514 கண்ணூர்/கார்வார் முதல் கேஎஸ்ஆர் பெங்களூரு வரையிலான எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16518/16524, ரயில் எண் 16575, ரயில் எண் 16576, ரயில் எண் 16585, ரயில் எண் 16586 ஆகியன ரத்து செய்யப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT