Published : 01 Jul 2015 03:59 PM
Last Updated : 01 Jul 2015 03:59 PM
மோடி அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள அமைச்சர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது, இது இந்த அரசின் அரசியல் நேர்மையின்மையை எடுத்துரைக்கிறது என்றும் ஆர்.எஸ்.எஸ். கருத்தியளாளரும், முன்னாள் பாஜக பொதுச் செயலருமான கே.என்.கோவிந்தாச்சாரியா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"இது அதிகார மைய அரசு, மக்கள் மைய அரசு அல்ல. இதில் பிரச்சினைகளுக்கும், மதிப்பீடுகளூக்கும் விடை கொடுக்கப்பட்டுவிட்டது.
அமைச்சர்களின் ராஜினாமா கோரும் எதிர்கட்சிகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே பொருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பொருந்தாது என்றும் கூறியுள்ளார். இத்தகைய பதில்கள் மக்களை அவர்களது முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்.
மக்களைச் செலுத்துவது அறவியலே தவிர சட்டங்கள் அல்ல ஊழலை எந்த மட்டத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியவர்களிடத்தில் நிச்சயம் ஏதோ தவறு இருக்கிறது என்பதாகவே கிராமப்புறங்களில் செய்தி பரவியுள்ளது. செல்வாக்குள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் ஒருவரையொருவர் அனுசரித்தே செல்வர் என்பது மக்களுக்கு தெரியவரும் அதே வேளையில், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை பதிந்துள்ளது.
நரேந்திர மோடி அறிவுபூர்வமான ஒரு மனிதர், அவர் மீதான நம்பகத்தன்மைக்கு இத்தகைய விவகாரங்கள் எந்த அளவுக்கு சேதம் ஏற்படுத்துகிறது என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பாக அரசியல் உணர்வு திரும்பும் என்று நினைக்கிறேன். தேர்தல்களில் வெற்றி தோல்விகள் என்பது கடந்து செல்லக்கூடிய விஷயம், ஆனால், நன்மதிப்பும், நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
கட்சிக்குள் பெரிய அளவில் உரையாடல் மற்றும் நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அது அணியாகத் திரண்டு செயல்படும் உணர்வுக்கு எதிராக மாறும். முடிவெடுப்பதில் பங்கேற்பு இல்லை என்பது தீவிரமாக உணரப்பட்டு வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அல்லது தேசிய செயற்குழு உறுப்பினர்கள் என்று யாராக இருந்தாலும், மூத்த தலைவர்களுடன் சந்திப்பு மேற்கொள்ள முடிவதில்லை, பங்கேற்பு என்பது அடுத்த கட்டமாகும்.
புதிய ஆட்சியமைப்பின் மீது ஆர்.எஸ்.எஸ்.-இன் நம்பிக்கை தேய்ந்து போயுள்ளது.
மக்கள் வாக்களித்தது 5 ஆண்டுகள் ஆட்சிக்காக என்பதால் ஆர்.எஸ்.எஸ். மூச்சை அடக்கிக் கொண்டு இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு காங்கிரஸ் அல்லாத ஆட்சியைக் கொண்டு வர நிறைய பாடுபட்டுள்ளோம். ஆனால் இந்த ஓராண்டில் புதிய ஆட்சியின் மீதான நம்பிக்கை சற்றே தேய்மானம் கண்டுள்ளது” என்றார் கோவிந்தாச்சாரியா.
வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தம் பற்றி அவர் கூறும் போது, “இந்த விவகாரம் ஒத்திப் போடப்பட்டிருக்கலாம். பரிமாற்றத்தில்... அசாமில் அதிக மக்கள் தொகை ஆனால் நிலப்பகுதி குறைவு. மேலும் வங்கதேசத்திலிருந்து இரண்டரை கோடி பேர் இங்கு புலம் பெயர்ந்த விவகாரத்தை எழுப்பியிருக்கலாம். ஆனால் அகதிகள் விவகாரத்தை பாஜக எழுப்பவேயில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT