Published : 09 Jul 2015 09:55 AM
Last Updated : 09 Jul 2015 09:55 AM
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறு வதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இக்குழுவின் 30 உறுப்பினர் களில் அதிமுக உள்ளிட்ட 6 கட்சிக ளின் உறுப்பினர்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்த சில மாற்றங்கள் காரணமாக இம்மசோதா சர்ச்சையில் சிக்கி யுள்ளது. மாநிலங்களவையில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா பரிந்துரைக்கப்பட்டது.
பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலு வாலியா தலைமையிலான இக்குழு வில், 12 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாகவும் 12 உறுப்பினர் கள் எதிராகவும் உள்ளனர். எஞ்சிய 6 உறுப்பினர்களும் அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் மத்திய அரசு தனக்கு சாதகமான முடிவு எடுத்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முடியும். எனவே நால்வரின் ஆதரவை பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினர்கள் வட்டாரம் கூறும் போது, “வழக்கமாக இதுபோன்ற குழுவில் பெரும்பான்மை உறுப்பி னர்களின் கருத்துகளே அதன் முடிவுகளில் எதிரொலிக்கும். இல்லையெனில், எதிர்ப்பு உறுப் பினர்களின் கருத்துகளும் அறிக் கையில் பதிவு செய்யப்பட்டு விடும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் இம்மசோதாவை மாநிலங்கள வையில் நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.
தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகள், ஆளும் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற் றுள்ளதால், இம்மசோதாவுக்கு இக்கட்சிகளின் 2 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோல் மத்திய அரசுடன் நிலவும் நல்லுறவின் காரணமாக அதிமுகவின் ஆதரவும் கிடைக் கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், மற்ற 3 கட்சிகளில் ஒன்றின் ஆதரவு கிடைத்தால் தான் குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக அமையும். இதனால் இந்த ஆதரவை பெறும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
நாடாளுமன்ற குழுவில், நில மசோதாவுக்கு ஆதரவு அளிப் பவர்கள் பட்டியலில் பாஜகவின் 11 உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் ஓர் உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். மசோதாவுக்கு எதிரான அணியில் காங்கிரஸின் 5, திரிணமூல் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினரும் உள்ளனர்.
இதனிடையே நாடாளுமன்றக் குழுவிடம் நேரிலும் தபால் மூலமும் கருத்துகளை தெரிவித்த பொதுநல அமைப்புகளில் பெரும்பாலானவை புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் சம்மதம், சமூகத் தில் ஏற்படும் தாக்கத்தை மதிப் பிடுதல் உள்ளிட்ட சில பிரிவுகள் நீக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அடுத்து அரசு துறைகளின் கருத்துகளை கேட்கும் பணியை நாடாளுமன்ற குழு வரும் 16-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த பணியும் முடிந்த பிறகே, இதுவரை எந்த முடிவும் எடுக்காத 6 கட்சிகள் இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT