Last Updated : 02 Jul, 2015 08:51 AM

 

Published : 02 Jul 2015 08:51 AM
Last Updated : 02 Jul 2015 08:51 AM

சட்டத்தை கையில் எடுக்கும் பிஹார் மக்கள்!

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் மாவட்டமான நாளந்தாவில் அமைந்துள்ளது நிர்பூர் கிராமம். இங்குள்ள தேவேந்திர பிரதாப் சின்ஹா பப்ளிக் ஸ்கூல் (டி.பி.எஸ்) என்ற பள்ளியின் 2 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள குட்டையில் மர்ம மான முறையில் இறந்து கிடந்த னர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியின் இயக்குநர் தேவேந்திர குமாரை பிடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் நிர்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுனில்குமார் நிர்ஜர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மறுநாளே பாங்கா மாவட்டத் தலைநகரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த 28 வயது இளைஞனை, திருடன் எனக் கருதி பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

இதற்கு முன் கடந்த 17-ம் தேதி ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ அனந்த்சிங், சட்டத்தை தனது கையில் எடுத்த சம்பவம் நடந்தது. இவரது கிராமத்தை சேர்ந்த மாணவிகள் அருகில் உள்ள பாட்னா மாவட்டத்தின் பாட் பஜாரில் டியூஷன் படித்து வந்தனர். இவர்களை 5 இளைஞர்கள் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள் ளனர். ஒருநாள் இவர்களில் ஒருவர் இம்மாணவிகள் சிலரின் ஆடை களை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அம் மாணவிகளின் பெற் றோர், காவல்துறையிடம் புகார் அளிக்காமல், தங்கள் எம்எல்ஏ அனந்த்சிங்கிடம் முறையிட்டுள்ள னர். இதையடுத்து அந்த இளை ஞர்களை பிடித்து வரும்படி, அனந்த்சிங் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ஆடை களை கிழித்ததாக குட்டூஸ் குமார் யாதவ் என்ற 25 வயது இளைஞரை மாணவிகள் அடையாளம் காட்டியுள்ளனர். இது நடந்த சில நாட்களில் அருகிலுள்ள பகுதியில் அந்த இளைஞர் பிணமாகக் கிடந்துள்ளார். இவர் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பவம் லாலு பிரசாத் யாதவால் எழுப்பப்பட்டு, கடந்த சனிக்கிழமை நிதிஷ்குமார் அரசால் அனந்த்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை அனைத்துக்கும் பிஹாரின் பாகல்பூரில் கடந்த 1979-80-ல் நடந்த ஒரு சம்பவம் முன்னுதாரணமாக கூறப்படுகிறது. இங்கு தொடர்ந்து நடந்துவந்த திருட்டு, கொள்ளைச் சம்பவங் கள் மீது பொதுமக்கள் காவல் துறையிடம் புகார் அளித்தும் பலனில்லாமல் இருந்துள்ளது. இதனால் பொறுமை இழந்த மக்கள் குற்றவாளிகளை பிடித்து அவர்கள் கண்களில் ‘கங்கை ஜலம்’ என்று கூறி ஆசிட்டை ஊற்றி பார்வை இழக்கச் செய்துள்ளனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பான ‘கங்கா ஜல் வழக்கு’ என்ற நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கடந்த 2003-ல் ‘கங்கா ஜல்’ என்ற பெயரில் பிரபல பாலிவுட் இயக்குநர் பிரகாஷ் ஜா-வின் தயாரிப்பில் இந்தி திரைப் படமாக வெளியானது. அஜய் தேவ்கான் இதில் கதாநாயகனாக நடித்தார்.

எனவே பொதுமக்களே சட்டத்தை கையில் எடுக்கும் சம்பவம் பிஹாரில் இன்னும் குறைந்தபாடில்லை என்பதையே சமீபத்திய நாளந்தா சம்பவம் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x