Published : 11 Jul 2015 09:53 AM
Last Updated : 11 Jul 2015 09:53 AM
சன் டிவி சொத்து முடக்கம் குறித்து 2ஜி வழக்கை கண்காணிக்கும் சிறப்பு அமர்வு முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் ஒரு பகுதியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் சன் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை தற் காலிகமாக முடக்கி, அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உத்தர வுப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சன் டிவி சார்பில் தொடரப் பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சன் டிவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. சொத்துகளை தற்காலிகமாக முடக்கிவைத்து அமலாக்கத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண் டும் என்று மனுவில் கோரப்பட்டி ருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சன் டிவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘2ஜி வழக்கு விசாரணையின் ஓர் அங்கமாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் சொத்துகளை முடக்கியதை கருத முடியாது. சொத்துகளை முடக்கியதை உறுதி செய்து அமலாக்கத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு வெளி யிட உள்ளது. அப்படி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், உடனே அனைத்து சொத்துகளும் அமலாக்கத்துறை கட்டுப்பாட் டுக்கு சென்றுவிடும். எனவே அமலாக்கத்துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
2ஜி வழக்கு தொடர்புடையது என்றால் அதில் நாங்கள் முடிவெ டுப்பது முறையாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மாவின் கருத்தைக் கேட்டனர். அவர், ‘2ஜி வழக்கின் விசாரணையில் வாதங் கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள் ளன. இந்நிலையில் மனுதாரரை மிரட்டும் வகையில் எந்த நடவடிக் கையும் இருக்காது என்று அமலாக் கத் துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 13-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்’ என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை 2ஜி வழக்கை கண்காணிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான சிறப்பு அமர்வு 2ஜி வழக்கு விசாரணையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT