Published : 02 Jul 2015 09:02 AM
Last Updated : 02 Jul 2015 09:02 AM
மருத்துவ சிகிச்சையில் கவனக்குறை வுக்கு நஷ்ட ஈடாக சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ரூ.1.8 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை நாட்டிலேயே அதிகபட்ச நஷ்டஈடு என்று கருதப்படுகிறது.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு, குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தை சில தினங்களில் மருத்து வமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது போன்று குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரெட்டினோபதி என்ற கண்பார்வை தொடர்பான சோதனை செய்வது அவசியம். அந்த சிகிச்சை மேற்கொள்ளாததால், அக்குழந்தைக்கு பார்வை பறிபோனது. இதற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டி, அக்குழந்தையின் தந்தை தேசிய நுகர்வோர் அமைப்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
தற்போது அக்குழந்தை வளர்ந்து 18 வயது இளம்பெண்ணாக மாறிவிட்ட நிலையில், நஷ்டஈடு போதாது என்று கேட்டு அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈட்டை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், மருத்துவமனை கவனக்குறைவை உறுதி செய்ததுடன் இளம்பெண்ணுக்கு ரூ.1.8 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிகிச்சையில் கவனக்குறைவுக்காக இந்தியாவில் விதிக்கப்பட்ட அதிக பட்ச நஷ்ட ஈடு தொகை இது என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT