Published : 11 Jul 2015 10:02 AM
Last Updated : 11 Jul 2015 10:02 AM
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் தூதராக, ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் நியமிக்கப்படு வார் என சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத் திறனாளியான இரா சிங்கால் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரா சிங்காலின் சாதனை ஒட்டுமொத்த இளைய சமுதாயத்துக்கும் முன்னுதாரண மாக, உயர் இலக்குகளை சாதிக்கவும் தூண்டுகோலாக இருக்கும்.
எனவே, அவர் மாற்றுத்திறனாளி களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் தூதுவராக நியமிக்கப்படுவார்” எனத் தெரிவித் துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் துறை மேம்பாட்டுத் துறை செயலாளர் லோவ் வர்மா கூறும்போது, “மாற்றுத்திறனாளிகள் போட்டித தேர்வுகளை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இரா சிங்கால் தெரிவித்தார். அப்பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT