Published : 08 May 2014 08:47 AM
Last Updated : 08 May 2014 08:47 AM
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதால், மக்களவை தேர்த லுக்கு பிறகு நிதிஷ் குமார் தலை மையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கடந்த செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுஷீல் குமார் மோடி, ‘‘நித்தீஷின் செயல்பாடுகளால் அவரது எம்.எல்.ஏ.க்கள் வெறுப்படைந்து விட்டனர். இவர்களில் சுமார் 52 பேர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். இவர்கள் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரமும் செய்தனர்’’ என்றார்.
இதன் காரணமாக, தேர்தல் முடிவு வெளியான பிறகு பிஹாரில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் இங்கு லாலுவின் ஆட்சி மீண்டும் வந்து விடக் கூடாது என்பது ஒரு காரணம் எனவும் சுஷீல் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஹார் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், ‘‘சுஷீல் கூறுவது முற்றிலும் தவறான தகவல். இதை வைத்து மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதாயம் தேடப் பார்க்கிறது. சொல்ல போனால், பாஜகவின் சில எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வர் நிதீஷின் கூட்டங்களில் வெளிப்படையாகக் கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர்’’ என்றார்.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 116, எதிர்க் கட்சியான பாஜக 91, ராஷ் டிரிய ஜனதா தளம் 22, காங் கிரஸ் 4, லோக் ஜனசக்தி 3, இந்தி யக் கம்யூனிஸ்டு கட்சி ஒன்று மற்றும் சுயேச்சைகள் ஆறு பேர் உள்ளனர்.
இதில் சுயேச்சைகள் 6, காங்கி ரஸின் 4 மற்றும் லோக் ஜன சக்தியின் 3 எம்.எல்.ஏ.க்கள் நித்தீ ஷுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் லாலு கூட்டணி ஏற்பட்டதால் அதன் ஆதரவு கிடைப் பது சிரமம். அதேபோல், குதிரை பேரங்களில் பெயர் பெற்ற பிஹாரில் சுயேச்சைகள் தங்களுடைய ஆதரவை வாபஸ் பெறுவது பெரிய விஷயம் அல்ல.
மேலும், ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு எம்.எல்.ஏ. பாஜக வேட் பாளராக எம்பி தேர்தலில் போட்டியி டுவதால் அவர் நீக்கப்பட்டிருக் கிறார். மேலும் ஐந்து பெண் எம்.எல். ஏ.க்களை நிதீஷ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இத்துடன் நிதீஷ் கட்சியின் பல எம்.எல்.ஏ.க் கள், தமக்கோ அல்லது தம் உறவினர் களுக்கோ எம்பி தேர்தலில் போட் டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர் மீது அதிருப்தியாக உள்ள தாகக் கருதப்படுகிறது.
எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பிஹாரில் ஆட்சி மாற்றம் தவிர்க்க இயலாத தாகி விடும் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT