Published : 14 May 2014 09:10 AM
Last Updated : 14 May 2014 09:10 AM

ஆட்சி அமைக்க முக்கிய கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக தயக்கம்

தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப் புகள் பாஜக-வுக்கு சாதகமாக வந்துள்ள சூழலில், மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் பெரிய கட்சிகளின் ஆதரவு தேவை இல்லை என்று பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆளும் கட்சிகளாக உள்ளன.

தேர்தலுக்கு பின்பு மேற்கண்ட முக்கியக் கட்சிகளுடன் கூட் டணி வேண்டாம் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் நாடாளு மன்ற உறுப்பினர்களை கொண்டி ருப்பதாலும், வலிமை வாய்ந்த பிராந்திய கட்சிகளாக இருப்பதாலும் மாநிலத்தின் தேவை களை கேட்டுப் பெறுவதில் உறுதி யாக இருப்பார்கள்.

உதாரணத்துக்கு ஒருவேளை பாஜக-வுக்கு அதிமுக ஆதரவு அளித்தால் காவிரி நதி நீர் பிரச்சினை, மின்சார பங்கீடு, மண் ணெண்ணைய் ஒதுக்கீடு, ஈழ விவகாரம் உள்ளிட்டவற்றில் மாநி லத்தின் நலன் கருதி, தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதி யாக இருப்பார்கள். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் நாடாளு மன்ற உறுப்பினர்களை வைத்திருக் கும் சிறு கட்சிகளை கூட்டணி யில் இணைத்துக் கொண்டால் தேவையான பெரும் பான்மையும் கிடைக்கும். எதிர் காலத்தில் எந்தத் தேவைக்கும் அவர்களிடமிருந்து நெருக்கடி வராது என்று பாஜக கருதுகிறது.

இதனால், ஆந்திராவில் காங்கிர ஸின் நேரடி எதிரியாக இருக்கும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பாஜகவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஒய்.எஸ். ஆர். காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டியோ, தன் மீதான வழக்குகளை சமாளிக்க பாஜ கவை ஆதரிக்க முடிவு செய்துள் ளார். இவர்கள் தவிர, ஹரியானா வில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள் உத்தர பிரதேசத்தில் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள், ஜார்க் கண்டில் சிபி சோரனின் ஜார்க் கண்ட் முக்தி மோட்சா ஆகியவை ஆதரவு பட்டியலில் உள்ளன. இவற்றில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா காங்கிரஸுடன் கூட்டணி இருந்தாலும் சில பிரச்சினை களால் கூட்டணியில் இருந்து வெளி யேறும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேற்கண்ட கட்சிகள் தவிர, வட கிழக்கு மாநிலங்களில் பி.ஏ.சங் மாவின் தேசிய மக்கள் கட்சி மற்றும் சங்மா தலைமை வகிக்கும் வடகிழக்கு மாநிலங்களின் பிராந்திய கட்சிகளின் கூட்டமைப் பும் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மொத்தம் 21 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள இந்த கூட்ட மைப்பு ஆறு முதல் 10 இடங்களைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் காங்கிரஸ் ஆதரவு நிலையில் இருந்தாலும் பிரச்சினை களின் அடிப்படையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் மாநிலத்தின் முக்கிய கட்சிகளின் தயவு தேவையில்லை என்ற நிலைபாட்டுக்கு பாஜக வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x