Published : 13 Jun 2015 08:45 PM
Last Updated : 13 Jun 2015 08:45 PM
மும்பை துறைமுகம் அருகே பெரும் ஒலியுடன் ஏற்பட்ட வெடிப்பினால் வதாலா பகுதியில் சனிக்கிழமை மாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் இருப்பதால் உண்மையான காரணம் என்னவென்பது பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
மும்பை தீயணைப்புத்துறையினர் தெரிவித்ததன்படி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் டாங்கர் வெடித்தது என்று கூற மற்ற தகவல்களோ, இதே நிறுவனத்துக்குச் சொந்தமான பைப் லைன் ஒன்று வெடித்ததாக தெரிவித்துள்ளன.
"மும்பை துறைமுகம் சாலை வழியாக செல்லும் பெட்ரோலிய பைப் லைன் வெடித்துள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டிராம்பேயில் உள்ள தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வதாலாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் பெட்ரோலிய பைப் லைன் அது. வதாலாவில் இவர்களுக்கு டிப்போ ஒன்று உள்ளது. இங்குதான் வெடிவிபத்து ஏற்பட்டு தீவிபத்துக்குள்ளானது" என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 தீயணைப்பு வண்டிகளும் 4 தண்னீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அப்பகுதியில் பெரிய அளவில் கரும்புகை எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT