Published : 27 Jun 2015 09:44 AM
Last Updated : 27 Jun 2015 09:44 AM

ஜூலை 1 முதல் திருப்பதியில் ஹெல்மெட் கட்டாயம்

இரு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருதி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் திருப்பதி நகரம் மட்டுமல்லாது சித்தூர் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வெளி மாநிலங்களில் இருந்து திருமலைக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்களும் வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் இருந்து திருமலைக்கு 21 கி.மீட்டர் தூரம் உள்ளது. மலை வழிப்பாதையில் பல இடங்களில் வளைவுகளும் உள்ளதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் அதிகமாக இருசக்கர வாகனங்களே விபத்துக்குள்ளாகின்றன.

மேலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 17 கி. மீட்டர் தூரம் உள்ளது. இந்த வழிப்பாதை அதிகமாக வளைவுகளை கொண்டதாகும். கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த தடத்திலும் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக திரு மலைக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சமூக விரோதிகள் ஹெல்மெட் அணிந்து வருவார்களோ என்கிற சந்தேகத்தில் இந்த திட்டத்தை கண்டிப்புடன் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் வரும் ஜூலை 1ம் தேதி முதல் திருமலைக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், பின்னால் உட்கார்ந்து வரும் பக்தரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x