Published : 21 Jun 2015 10:56 AM
Last Updated : 21 Jun 2015 10:56 AM
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தகாத முறையில் விமர்சனம் செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சி எம்பி அஷ்வானி குமார் சவுபே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாஜக எம்பியான அஷ்வானி குமார் வெள்ளிக்கிழமை பிஹார் மாநிலத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான பக்சாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, சோனியா காந்தியை ‘ராட்சஸி' என்றும், ராகுல் காந்தியை ‘வெளிநாட்டுக் கிளி' என்றும் தகாத முறையில் விமர்சித்தார்.
இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள், இதுகுறித்து அஷ்வானி குமார் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி, அவர் தங்கியிருக்கும் ஓட்டலின் முன்பு நேற்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முசாபர்பூர் மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் தொண்டர் ஒருவரால் நீதிமன்றத்தில், அஷ்வானி குமாருக்கு எதிராக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு நிதிஷ் குமார் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவர்களின் கைகளை வெட்டிவிடுவதாகக் கூறி ஏற்கெனவே அவர் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT