Published : 17 Jun 2015 08:12 AM
Last Updated : 17 Jun 2015 08:12 AM

தெலங்கானா மேலவைத் தேர்தல் லஞ்ச விவகாரம்: ஆந்திர முதல்வருக்கு சம்மன் தகவலால் பரபரப்பு

தெலங்கானா மேலவைத் தேர்த லில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாற்றுக் கட்சி எம்எல்ஏவுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் அளிக்கப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. ஆந்திர முதல்வருக்கு சம்மன் அனுப்ப தெலங்கானா லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடிவு செய்த தாக நேற்று வந்த தகவல்களால் இரு மாநிலங்களிலும் பதற்றம் ஏற்பட்டது.

தெலங்கானா மேலவைத் தேர்த லில் தெலுங்கு தேசம் கட்சி வேட் பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏவுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி உட் பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக தெலங்கானா தொலைக்காட்சி சந்திரபாபு நாயுடுவின் பேச்சுகளை வெளியிட்டது.

இதனால் இரு மாநில முதல்வர் களும் ஒருவரை ஒருவர் பகிரங்க மாக விமர்சித்துக் கொண்டனர். இரு மாநில முதல்வர்களும் ஆளுநர் நரசிம்மன், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து புகார் செய்தனர்.

ஆளுநர் நரசிம்மனும் டில்லி சென்று இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடு தெலங்கானா அரசுக்கு எதிராக 6 பக்க புகாரை பிரதமருக்கு அனுப்பினார்.

இந்நிலையில், நேற்று தெலங்கானா லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெலங்கானா முதல்வர் மற்றும் ஆளுநர் நரசிம்மனை சந்தித்தனர். இதனால், சந்திரபாபு நாயுடுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்மன் அனுப்ப உள்ளதாக செய்திகள் பரவின. மேலும், தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம், லஞ்ச ஒழிப்பு அலுவலகம், சந்திரபாபு நாயுடுவின் வீடு ஆகிய பகுதிகளில் காவலர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் சம்மன் அனுப்புவது உறுதி என்ற தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சந்திரபாபு ஆலோசனை

இதனிடையே ஹைதராபாதில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள், ஆந்திர டிஜிபி ஆகி யோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது இதுவரை ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங் களில் பதிவாகி உள்ள 87 வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் குறித்து ஒரு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று காலை, தெலங்கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம் வழங்கிய வழக்கில் 4-வது குற்ற வாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜே.மத்தைய்யா என்பவர் விஜய வாடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் தெலங்கானா அரசால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி இருந்தார். இந்த வழக்கை சிஐடி காவல்துறை யிடம் ஒப்படைக்கும்படி ஆந்திர அரசு உத்தரவிட்டது. இந்த சம்பவங் களால் நேற்று ஆந்திரா, தெலங் கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பதற்றம் ஏற்பட்டது.

அடுத்த முதல்வர் யார்?

சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், அடுத்த ஆந்திர முதல்வராக மறைந்த என்.டி ராமாராவின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா முதல்வராக பொறுப்பேற்பார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

சில தெலுங்கு தேச கட்சி அலுவலகங்களிலும் இது குறித்து நேற்று சர்ச்சை நிலவியது. இதேபோன்று, மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவுக்கும் முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

சந்திரபாபு நாயுடு ராஜினாமா?

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக மாற்றுக் கட்சி எம்எல்ஏவுக்கு லஞ்சம் வழங்குவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எம்எல்ஏ ரேவந்த் ரெட்டியை அனுப்பினாரா? இதற்காக தொலைபேசியில் பேசினாரா? எனும் கேள்விகள் தற்போது தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகளிடையே பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. இதில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்வார் என நேற்று இரு மாநிலங்களிலும் தகவல் பரவியது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ராஜினாமா தகவலை ஆந்திர அமைச்சர்கள் மறுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x