Published : 24 Jun 2015 08:22 AM
Last Updated : 24 Jun 2015 08:22 AM

காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்வேன்: நடிகை ஜெயசுதா உறுதி

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள் வேன் என நடிகையும் முன்னாள் எம்எல்ஏ.வுமான ஜெயசுதா நேற்று ஹைதராபாதில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சி யில் சேர்ந்தார் நடிகை ஜெயசுதா. இதனைத் தொடர்ந்து இவர் செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தெலங்கானா மாநிலம் உதயமானபோது நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று ஜெயசுதா, காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில தலைவர் உத்தமகுமார் ரெட்டியை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசும்போது, “என்னை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக வந்த செய்திகள் யாரோ வேண்டு மென்றே கிளப்பி விட்ட வதந்தி. இதனை கேட்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். இனி காங்கிரஸ் கட்சிக்காக தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் செய்வேன். இரு மாநிலத் திலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x