Published : 17 Jun 2015 10:34 AM
Last Updated : 17 Jun 2015 10:34 AM
அம்பேத்கரின் பேரனும், ரிபப்ளி கன் சேனா கட்சியின் தலைவரு மான ஆனந்தராஜ் அம்பேத்கர் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
மகாராஷ்டிர மாநிலம் ராய் காட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது அரசியல் எதிரிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரிபப்ளிகன் சேனா மாநில பொதுச் செயலாளர் வசந்த் காம்ளி கூறும்போது, “கல்லூரி முதல்வரை அவரது அலு வலகத்தில் சந்திக்க ஆனந்தராஜ் அம்பேத்கர் சென்று கொண்டிருந்த போது, சிலர் அவர் மீது தடி, கம்பி மற்றும் இதர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அவரை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
இருப்பினும் அவருடன் சென்ற வர்கள் ஆனந்தராஜை பாதுகாப் பாக அழைத்துச் சென்றனர். இதில், ஆனந்தராஜ் காயமடையாமல் தப்பினார். அவருடன் சென்ற நால்வர் காயமடைந்தனர். இதில் ஒருவர் நிலைமை மோசமாக உள்ளது” என்றார்.
இத்தாக்குதலை சிவசேனா தொண்டர்கள் நிகழ்த்தியிருக் கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மும்பை தாதரில் சட்ட மேதை அம்பேத்கருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என ஆனந்தராஜ் அம்பேத்கர் போராடி வருவது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT