Last Updated : 06 Jun, 2015 09:29 AM

 

Published : 06 Jun 2015 09:29 AM
Last Updated : 06 Jun 2015 09:29 AM

இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைத்துக்கொள்கிறது இலங்கை

இந்தியாவுக்கான இலங்கை தூதர் சுதர்சன் சேனேவிரத்னேவை அந்நாட்டு அரசு திரும்ப அழைத்துக்கொள்கிறது.

நாடு திரும்புமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதை சுதர்சன் டெல்லியில் நேற்று உறுதிப்படுத்தினார்.

இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள், இரு நாடுகளிடையே இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வரும் வேளையில் சுதர்சன் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

சுதர்சன், டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்து கல்லூரியில் படித்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மிகவும் மதிக்கப்படும் கல்வியாள ரான இவர் இலங்கையின் பெர டெனியா பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் துறைத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிவர்.

சுதர்சன் நேற்று டெல்லியில் கூறும்போது, “இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இலங்கை தேவை. அதுபோல் இலங்கைக்கு இந்தியா தேவைப்படுகிறது. இதற்கு இருநாடுகளின் அமை விடம் முக்கிய காரணமாகிறது. இலங்கை பாதுகாப்பாக இல்லாவிட்டால் இந்தியா பாது காப்பாக இருக்க முடியாது. இந்த உண்மை தமிழ்நாட்டி லும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” என்றார்.

இந்தியா இலங்கை இடையே அதிகாரப்பூர்வ, மற்றும் அதிகாரப் பூர்வமற்ற பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் நெருங்கி வர சுதர்சன் உதவியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x