Published : 25 Jun 2015 10:16 AM
Last Updated : 25 Jun 2015 10:16 AM
அனைத்து வசதிகளுடன் உருவாகும் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக் கிறார். இத்திட்டத்தில் 1 நகருக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி என 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
நாட்டின் அனைத்து மாநிலங் களிலும் இந்த நகரங்கள் ஒரே தரத்தில் அமையவுள்ளன. போக்கு வரத்து, மின்சாரம் குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரமான காற் றோட்டம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்பு கட்டாயம் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஏழைகளின் வருமானத்துக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு சொந்த வீடுகள் அமைய இந்த ஸ்மார்ட் நகரங்களில் கட்டாயம் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மின் ஆளுமை வசதியுடன் அமைக்கப்படவிருக்கும் இந்த நகரங்களில் இணையதள வசதி களும் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்கு ஒவ்வொரு மாநில அரசும் நகரங் களை பரிந்துரைக்கிறது. இவற்றை இத்திட்டத்துக்கு தேர்வுசெய்ய மத்திய நகர்ப்புற அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் நகரங்களின் எண்ணிக்கை, அதன் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் புவியியல் சமத்துவம் ஆகியவற்றை பொருத்து இறுதி முடிவு எடுக்கிறது.
இத்திட்டத்தில் முதல்கட்டமாக 20 ஸ்மார்ட் நகரங்களுக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 40 நகரங்களுக்கு 2016-17-ம் ஆண்டும், எஞ்சிய 40 நகரங்க ளுக்கு 2017-18-ம் ஆண்டிலும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட உள்ளது. பாஜக ஆளும் 4 மாநிலங் கள் உட்பட முதல்கட்டமாக, 12 மாநிலங்களில் இந்த நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை உலகின் எந்த நாடும் இத்திட்டத்தை கையில் எடுக்கவில்லை எனவும், ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதை விட நம் நாட்டின் கிராமங்களை மேம்படுத்தலாம் எனவும் காங்கிரஸ் புகார் கூறி வந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அடல் புத்தாக்கம் மற்றும் நகர்புற மாற்றுத் திட்டம் (அம்ருத்) என்ற திட்டத்தை வகுத்து சிறிய நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தையும் ஸ்மார்ட் நகரங்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்த இருக்கிறார் பிரதமர் மோடி.
எனினும் முந்தைய காங்கிரஸ் அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய புறநகர் புனரமைப்பு திட்டத்தையே, மோடி அரசு அம்ருத் என பெயர் மாற்றம் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT