Published : 02 Jun 2015 08:39 AM
Last Updated : 02 Jun 2015 08:39 AM
தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில், அதை உரிய நேரத்தில் நிறுத்த `வாட்ஸ்-ஆப்’ உதவியுள்ளது.
ஹைதராபாத் சரூர் நகரைச் சேர்ந்த பி.விட்டல் என்பவரின் மகள் கீதா (15). 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த இவர், தொடர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் இதற்கு சம்மதிக்காத இவரது தந்தை, 18 வயது பூர்த்தி யாகாத தனது மகளை தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் முடிக்க பேசி முடிவு செய்தார். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள சரூர் நகர் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாத கீதா, தனது பிரச்சினைகளை ஒரு கடிதத்தில் எழுதினார். இதை தனது செல்போ னில் படம் பிடித்து `வாட்ஸ்-ஆப்’ மூலம் ஹைதராபாத் நகர போலீ ஸாருக்கு சனிக்கிழமை இரவு 12 மணியளவில் அனுப்பி வைத்தார்.
இதை அறிந்த எல்.பி. நகர் காவல் துறை துணை ஆணையர் வேணுகோபால், இந்த விவகாரத் தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சரூர் நகர் போலீஸா ருக்கும், தாய்-சேய் நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட் டார். அதன்பேரில் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் திருமண மண்டபத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் தாய்-சேய் நலத்துறை அதிகாரிகள், இரு வீட்டாரின் பெற் றோரிடமும், உறவினர்களிடமும் பேசி திருமணத்தை நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகளுக்கு கீதா தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT