Published : 04 Jun 2015 08:46 AM
Last Updated : 04 Jun 2015 08:46 AM

அமைச்சர் வீட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்: பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை

ஆந்திர அமைச்சர் வீட்டில் கேட்பா ரற்று கிடந்த ஒரு பையில் ரூ.10 லட்சம் இருந்தது. இது தொடர்பாக பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநில தாய்-சேய் நலம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிதானி சுஜாதா. இவர் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வீரவானரம் பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது.

அமைச்சரின் உதவியாளர் சுப்பாராவ் அந்த பையை சோத னையிட்டபோது, அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. உடன டியாக இதுகுறித்து ஏலூர் போலீ ஸாருக்கு தகவல் கொடுத்துள் ளார். அதன்பேரில் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த போலீஸார், அந்தப் பையை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் ரூ.500, ரூ.1,000 கட்டுகள் என ரூ.10 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பையில், லட்சுமி என்ற மாணவிக்கு சொந்தமான அரசு ஆசிரியர் வேலைக்காக தேர்வு எழுதிய ‘ஹால் டிக்கெட்’ இருந்துள்ளது. இதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி. பூஷன் தலைமையில்போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்தப் பையை ஓய்வு பெற்ற அரசு விடுதி வார்டன் லட்சுமிபதி (62) என்ற பெண் கொண்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பெண்ணை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமிபதி கூறும் போது, “எனது மகளின் திருமணத் துக்காக பாலகொல்லு எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அமைச்சரின் வீட்டுக்குச் சென் றேன். அமைச்சரின் தந்தை பாப்ஜியை எனக்கு பல ஆண்டு களாக தெரியும். அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு, பணப்பையை அங்கேயே மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்” என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, லட்சுமிபதி யின் மகள் லட்சுமியிடமும் போலீஸார் தனியாக விசாரணை நடத்தினர். தனது தாய், நிலம் வாங்குவதற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்தபோது அமைச்சரின் வீட்டில் பையை மறந்து வைத்துவிட்டு வந்ததாக தெரிவித்தார். இருவரும் முரண் பட்ட காரணத்தைக் கூறியிருப்ப தால், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் வேலைக்காக லஞ்சம் வழங்க பணம் கொடுக்க முயன் றார்களா என்ற கோணத்தில் தீவிர மாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பிதானி சுஜாதா செய்தி யாளர்களிடம் நேற்று கூறும் போது, “அந்தப் பெண் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது. அவர் வரும்போது நான் வீட்டில் இல்லை. வேண்டு மென்றே யாரோ சதிதிட்டம் தீட்டி உள்ளனர்” என்றார்.

இதற்கிடையே, பணத்தை தவறவிட்ட லட்சுமிபதி உடனடி யாக போலீஸில் புகார் அளிக்கா ததும், அவரது பையில் ‘ஹால் டிக்கெட்’ இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். லட்சுமிபதி தனது மகளுக்கு அரசு ஆசிரியர் வேலையை பெற்றுத்தர அமைச் சருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க சென்றதாக எதிர்கட்சியி னர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் தெலங்கானா மாநில மேலவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக் களிக்க, ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீ ஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டு தற்போது சிறையில் உள்ளார் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி. இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் வீட்டில் கேட்பாரற்று கிடந்த இந்த பணப் பையால் அக்கட்சிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x