Published : 05 May 2015 08:48 AM
Last Updated : 05 May 2015 08:48 AM
கேரளத்தில் திருச்சூர் சரக ஐ.ஜி. ஆகப் பணியாற்றி வருபவர் டி.ஜே.ஜோஸ். இவர் நேற்று கலமசேரியில் உள்ள புனித பால் கல்லூரியில் முதுநிலை சட்டத் தேர்வு எழுதினார்.
அப்போது அவர் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி, தேர்வு அறையில் இருந்த மேற்பார்வையாளரால் வெளி யேற்றப்பட்டார். அவர் ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்பது அந்த மேற்பார்வையாளருக்குத் தெரியவில்லை.
மேலும், இது குறித்து மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்துக்கும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளதாக புனித பால் கல்லூரியின் துணை முதல்வர் வி.ஜே.பீட்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜோஸ் கூறும்போது, ‘‘நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. செவ் வாய்க்கிழமை நடக்கும் இறுதித் தேர்வையும் எழுதுவேன்" என்றார். டி.ஜி.பி. கே.என்.பால சுப்பிரமணியன் கூறும் போது, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT