Last Updated : 21 May, 2015 06:58 PM

 

Published : 21 May 2015 06:58 PM
Last Updated : 21 May 2015 06:58 PM

அரசு தவறு செய்தால் மாநிலங்களவை தடுக்கும்: குலாம் நபி ஆஸாத்

அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் மக்களவையில் தடுக்கப்படுவது தவறும்போது மாநிலங்களவையில் அதனைத் தடுக்கிறோம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மேலவை என்ன செய்ய வேண்டுமோ அதனைத்தான் நாங்கள் செய்கிறோம். ஜனநாயகத்தில் குரல் எழுப்ப எதிர்கட்சிகளுக்கு உரிமை உண்டு. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அரசு செவிமடுக்கவில்லை எனில், அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நாங்கள் (மாநிலங்களவை) அதனைத் தடுக்கிறோம்.

சட்டங்களில் உள்ள குறைபாடுகளை மாநிலங்களவை கட்டாயம் நீக்க வேண்டும்.

மக்களவை மட்டுமே முக்கியமானது எனில், மாநிலங்களவை உருவாக்கப்பட்டிருக்காது. மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் என எங்களுக்கு இரண்டு மடங்கு பொறுப்பு உள்ளது.

மக்களவையில் ராகுல் காந்தி சிறப்பாக செயல்படுகிறார். காங்கிரஸின் செய்தி ஒன்றுதான். அதாவது நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது.

மோடியின் அரசைப் பொறுத்தவரை அவர்கள் கூறிய நல்ல நாள் என்பது 125 கோடி மக்களுக்கா அல்லது நான், எனது என்ற தனிப்பட்டவருக்கா?

இவ்வாறு அவர் தெரிவித்தார். சமூக திட்டங்களுக்கான நிதியை அரசு குறைத்துள்ளதற்காகவும் அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x