Last Updated : 14 May, 2015 03:56 PM

 

Published : 14 May 2015 03:56 PM
Last Updated : 14 May 2015 03:56 PM

பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள் மீது அவதூறு வழக்கு: டெல்லி அரசின் முடிவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

உண்மைக்குப் புறம்பான செய்தி களை வெளியிடும் பத்திரிகை, சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்ற டெல்லி அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

டெல்லி அரசைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்தி களை வெளியிடும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல் கள் மீது அவதூறு வழக்கு தொடர் வது என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த 6-ம் தேதி செய்தி மக்கள் தொடர்புத்துறை ஓர் உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அமித் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசா ரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி அரசின் உத்தர வுக்கு நேற்று தடை விதித்தது.

இதுபோன்ற ஓர் உத்தரவை பிறப்பித்ததற்கான காரணம் குறித்து 6 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து டெல்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் ‘தி இந்து’விடம் கூறும்போது, “டெல்லி அரசின் தவறுகளை எடுத்துரைக் கும் ஊடகங்களை நசுக்கும் அரக் கத்தனமான உத்தரவு இது. கேஜ்ரிவால் ஜனநாயகத்துக்கு எதிரான மற்றும் சட்டத்தை மதிக் காத மனோபாவம் கொண்டவர் என்று சிலர் கூறுவதை நிரூபிக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளையும், தங்களது தவறைச் சுட்டிக்காட்டும் ஊடகங் களையும் அடக்கும் சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடுதான் இந்த உத்தரவு. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கின் மூலம் கேஜ்ரிவாலின் இரட்டை முகம் கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வரும். இதுகுறித்து ஆளுநர் நஜீப் ஜங்கை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளோம்” என்றார்.

டெல்லி அரசு பிறப்பித்த உத்தர வில், “முதல்வர், மாநில அமைச்சர் கள் மற்றும் அரசு அதிகாரிகளைப் பற்றி உண்மைக்கு மாறான செய்தியை வெளியிடுபவர்களைப் பற்றி உள்துறை அமைச்சக முதன்மை அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும். இதுகுறித்து அவர் விசாரித்து சட்ட அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்புவார். அதை ஆய்வு செய்து ஐபிசி 499, 500-வது பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரலாம் என சட்ட அமைச்சகம் பரிந்துரைத்தால், சம்மந்தப்பட்ட ஊடகங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x