Last Updated : 25 May, 2015 04:59 PM

 

Published : 25 May 2015 04:59 PM
Last Updated : 25 May 2015 04:59 PM

நாட்டில் பாதுகாப்பற்ற, அனுமதிக்கப்படாத சேர்க்கைகளில் மருந்துகள் பெருக்கம்

வலி நிவாரணி, மனநோய் சிகிச்சைக்குண்டான மருந்துகளின் சேர்க்கைகள் பல பாதுகாப்பற்றதாகவும், அனுமதிக்கப்படாத சேர்க்கைகளில் மருந்துகள் பல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் (FDC) என்று அழைக்கப்படும் மருந்துகள் என்னவெனில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் ஒரே மாத்திரை அல்லது திரவ வடிவத்தில் தயாரிக்கப்பட்டு ஒரே டோசாக வழங்கப்படுவது. மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வலிநிவாரணி மாத்திரைகள், மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் பலவும் ஒரே டோஸில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் சேர்க்கப்பட்டு ஒரே டோஸாக அளிக்கப்படுவது பிரசித்தமான நடைமுறை. இதைத்தான் பிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று மருத்துவ வட்டாரங்கள் அழைக்கின்றன.

இந்த மருந்துகள் பல பாதுகாப்பற்றதாகவும் தீங்கு விளவிப்பதாகவும் பல காம்பினேஷன்கள் அனுமதிக்கப்படாத ஒன்றாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் இந்த மருந்துகள் பெருக்கமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக மனநோய் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்துச் சேர்க்கைகள் பல அபாயகரமானதாக இருப்பதாக PLOS Medicine என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்று எச்சரித்துள்ளது.

“ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துப்பொருட்கள் கலந்த இவ்வகை மருந்துகள் குறிப்பாக வலிநிவாரணிகள், மன அழுத்தம்/சோர்வு, மனச்சிதைவு நோய்களுக்கான சேர்க்கை மருந்துகள் பலவற்றில் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதி பெறாத, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட, மேலும் அபாயகரமான சேர்க்கைகள் என்று அறிவிக்கப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் உள்ளன” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெராய்ட் அல்லாத வலிநிவாரணி மருந்துகள் பல சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. அல்லது அதன் பயன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய 4 நோய் சிகிச்சைகளுக்கான பிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் போன்று அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனுமதி வழங்கப்பட்ட சேர்க்கை மருந்துகள் பலவும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழக அனுமதி தேதிக்கு முன்னமேயே சந்தைகளில் விற்கப்படுகின்றன.

2001-ம் ஆண்டு முதலே, மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்த பல மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுத் தரவுகள் இல்லை. எந்த அடிப்படையில் இந்த ‘காம்பினேஷன்’ மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

“அனுமதி அளிக்கப்படாத சேர்க்கை மருந்துகள் முதலில் உடனடியாகத் தடை செய்யப்படுவது அவசியம். அதாவது சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட காம்பினேஷன் மருந்துகளின் அடிப்படையில் இந்தியாவில் அந்த சேர்க்கை மருந்துகள் விற்கப்படுவது உடனடியாகத் தடை செய்யப்படவேண்டும்” என்று இந்த கட்டுரை ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்தியாவில் புழங்கும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் பற்றிய தரவு அடிப்படையிலான முதல் ஆய்வு இந்த ஆய்வே.

அவர்கள் அடையாளம் கண்ட பிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் விவரம் வருமாறு:

ஸ்டெராய்ட் அல்லாத வலிநிவாரணிகள் 124-இல் 73% அனுமதி பெறாத மருந்துகளாகும்.

மனச்சோர்வு/அழுத்தம் மற்றும் மனச்சிதைவு நோய்களுக்கான மருந்துச் சேர்க்கைகளில் முறையே 81% மற்றும் 70% மருந்துகள் அனுமதி வழங்கப்படாதது.

மாறாக சர்க்கரை நோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் 25% மெட்பார்மின் ஃபார்முலேஷன்களில் 20% அனுமதி வழங்கப்படாதது.

பெரிய அளவில் அனுமதிக்கப்படாத சேர்க்கை மருந்துகள் அல்லது மருந்துச் சேர்க்கைகள் இந்தியாவில் புழங்குவது மருத்துவ உலகின் விற்பனை அளவில் பெரிய அளவில் பிரதிபலித்துள்ளது. அதாவது மொத்த விற்பனைகளில் சரிபாதி அளவுக்கு அனுமதிக்கப்படாத மருந்துச் சேர்க்கைகளின் விற்பனைகள் பங்களிப்பு செய்துள்ளதாக அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

அனுமதிக்கப்படாத, அல்லது தடை செய்யப்பட்ட, அல்லது சர்வதேச அளவில் நடைமுறையில் இல்லாத காம்பினேஷன் மருந்துகள் பல இந்தியாவில் புழங்குகின்றன. இதனால்தான் நோயின் எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் பிற மருந்துகளுக்கு உடல் வினையாற்றாத தன்மையும் ஏற்படுவதாக இந்த ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x