Published : 02 May 2015 05:50 PM
Last Updated : 02 May 2015 05:50 PM
தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது.
ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது.
விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5 புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.
அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் தரநிலையில் 2-ம் இடத்தில் இருந்த இந்திரா காந்தி விமான நிலையம் 2014-ம் ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியது. 2007-ம் ஆண்டு 3.2 புள்ளிகளையே எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
2014-15-ம் ஆண்டில் சுமார் 4 கோடி பயணிகளை திறம்பட நிர்வகித்த இந்திரா காந்தி விமான நிலையம் நாளொன்றுக்கு சராசரியாக 885 விமானங்கள் போக்குவரத்தையும், சுமார் 696,000 மெட்ரிக் டன்கள் சரக்குப் போக்குவரத்தையும் கையாண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT