Last Updated : 13 May, 2015 08:25 AM

1  

Published : 13 May 2015 08:25 AM
Last Updated : 13 May 2015 08:25 AM

ஜெயலலிதா வழக்கு மட்டும் விரைவாக விசாரிக்கப்பட்டது எப்படி?- உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் கேள்வி

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்கு கள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியா னது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த அரசியல்வாதிகள் தங்கள் பதவியை இழக்கும் வகை யில் தேர்தல் ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் காரண மான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தவர் இவர் ஆவார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் லில்லி தாமஸ் கூறியதாவது: ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் மேல்முறையீடு செய்துவிட்டு காலம் கடத்தும் போது, கீழமை நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பில்லாத சூழல் இருந்தது. இதை தடுக்கும் பொருட்டுதான், ஊழல் வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டாலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழக்கும் வகை யில் நான் பொதுநல வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த நல்ல மாற்றம் மேலும் ஒரு சிக்கலுக்கு உள்ளானது போல் தோன்றுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப் பட்ட பின் தண்டிக்கப்பட்ட லாலு உட்பட பலரது மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு மட்டும் விரைந்து தீர்ப்பு வெளி யாகக் காரணம் என்ன? இது எதன் அடிப்படையில் அளிக்கப் பட்டது என்பது தனி விஷயமாக இருப்பினும், அதனால் ஏற்பட் டுள்ள சூழல் கவலைக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் நீதி அனைவருக்கும் சமமாக இருக்கும் வகையில் ஒரு பொதுநல வழக்கு போடலாமா என யோசித்து வரு கிறேன். ஜெயலலிதா மீதான இரு நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் விரிவாகப் படித்த பின் அது குறித்து முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x