Published : 27 May 2015 08:15 AM
Last Updated : 27 May 2015 08:15 AM

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்: நெல்லூரில் பொதுமக்கள் பீதி

ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.

முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x