Last Updated : 11 May, 2015 05:21 PM

 

Published : 11 May 2015 05:21 PM
Last Updated : 11 May 2015 05:21 PM

பெண்ணை செங்கலால் தாக்கிய டெல்லி டிராபிக் போலீஸ் கைது

டெல்லியில் இன்று காலை பெண் ஒருவரை செங்கலால் தாக்கிய போக்குவரத்துக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சூடாக பரவ, சதீஷ் சந்திரா என்ற அந்த ஹெட் கான்ஸ்டபிள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டார்.

டெல்லி, உள்துறை அமைச்சர், சத்யேந்திர ஜெயின், அந்தப் போக்குவரத்துக் காவலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கூறுகையில், “நான் எனது மகளை பள்ளிக்கு எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். போக்குவரத்துக் காவலர் அப்போது ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்குமாறு கேட்டதோடு சிகப்பு விளக்கு போட்டிருந்ததை மீறி வந்ததற்காக ரூ.200 அபராதம் விதித்தார். ஆனால் ரூ.200க்கான ரசீது கொடுக்க மாட்டேன் என்றார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எனக்கு ரசீது வேண்டும் என்றேன், அவர் தருவதாக இல்லை. உடனே அவர் எனது ஸ்கூட்டியை உதைத்து, செங்கலால் தாக்கினார். என்னை செங்கலால் தாக்கினார், நான் சத்தம்போட்டவுடன் அங்கு மக்கள் கூடிவிட்டனர்” என்றார்.

மத்திய டெல்லியில் கால்ஃப் லிங்க்ஸில் இந்த பரபரப்பு சம்பவத்தை கமல்காந்த் என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இது அதிகார மட்டத்தின் கவன ஈர்ப்பை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x