Published : 07 May 2015 07:23 PM
Last Updated : 07 May 2015 07:23 PM
கார் விபத்து வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சலமான் கானின் நடத்தையே அவருக்கு எதிராகத் திரும்பியதாக நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
சம்பவம் நடந்த பிறகு இடத்தை விட்டு தலைமறைவான சல்மான் கானின் நடத்தையே அவருக்கு எதிராகத் திரும்பியதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
இது குறித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே தனது 240 பக்க தீர்ப்பில் கூறும் போது, “சம்பவம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யாமலும், சம்பவத்தை காவல்துறைக்கு தெரிவிக்காமலும் இடத்தை விட்டு அகன்றது என்ற சூழல் குற்றவாளிக்கு எதிராக அமைந்தது.” என்றார்.
அதேபோல் சல்மான் கான் ஓட்டுநர் தனது வாக்குமூலத்தில் தான் காரை ஓட்டியதாக தெரிவித்ததை நீதிபதி ஏற்கவில்லை. “குற்றம்சாட்டப்பட்டவர் (சல்மான் கான்) தான் காரை ஓட்டி வந்தார் என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. அசோக் சிங் என்ற சாட்சி கொண்டு வரப்பட்ட சாட்சி, அவர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு உதவுவதற்காக சலீம் கானின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜரானவர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஓட்டிய காரின் டயர் வெடித்தது என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்பதற்கில்லை, ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவர் கார் நல்ல வேகத்தில் வந்துள்ளது.
உரிமம் இல்லாமல் குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பதும், நடைபாதையில் தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் என்பதும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தெரிந்த விஷயமே:” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT