Published : 06 May 2015 08:53 AM
Last Updated : 06 May 2015 08:53 AM
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப் பில் சேர்ந்த தெலங்கானா மாநில இளைஞர் சிரியாவில் நடந்த சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தாக உளவுத்துறை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தெலங்கானா மாநிலம், அடிலா பாத் மாவட்டம், மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் ஹனீ வாசிம் (25). பொறியியல் பட்டதாரி யான இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாத அமைப்பினருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈர்க்கப்பட்ட வாசிம், அங்கிருந்து சிரியா சென்று தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த இயக்கத்தில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து சிரியாவில் ராணுவத்துடன் நடந்த போரில் வாசிம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து வாசிம் பெற்றோருக்கு உளவுத் துறை அதிகாரப்பூர்வமாக தகவல் கொடுத்தது.
கடந்த பிப்ரவரி மாதம் தனது தங்கையின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாசிம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கரீம் நகரைச் சேர்ந்த இவரது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். தற்போது அந்த நண்பர் என்ன ஆனார் எனபது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர்-அல்-பாக்தாதியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஏராளமான இந்திய இளைஞர்கள் கடந்த ஆண்டு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்குச் சென்று தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக உளவுத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT