Published : 04 Apr 2015 02:21 PM
Last Updated : 04 Apr 2015 02:21 PM

பகவத் கீதை போட்டியில் பரிசு வென்ற முஸ்லிம் சிறுமிக்கு உ.பி. அரசு பாராட்டு

பகவத் கீதை தொடர்பான போட்டி ஒன்றில், முதல் பரிசு வென்ற 12 வயது முஸ்லிம் சிறுமியை பாராட்டி கவுரவிக்கவுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "ஸ்ரீமத் பகவத் கீதா சாம்பியன் லீக் எனும் தலைப்பில் இஸ்கான் சர்வதேச சங்கம் நடத்திய போட்டியில், 105 தனியார் பள்ளிகள் மற்றும் 90 நகராட்சிப் பள்ளிகள் என‌ 195 பள்ளிகளைச் சேர்ந்த 4,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் மரியம் ஆசிஃப் சித்திகி என்ற சிறுமி முதல் பரிசு வென்றுள்ளார். அவரை பாராட்டி கவுரவிக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற நல்ல செய்தி சமூகத்தில் பரப்பப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x