Published : 25 Apr 2015 09:12 AM
Last Updated : 25 Apr 2015 09:12 AM

காதல் தோல்வியால் சர்ச் மீது தாக்குதல்: இளைஞர் ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், காதல் தோல்வியால் ஆத்திரமடைந்து, தான் அந்த தேவாலயத்தைச் சேதப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

கடந்த 16ம் தேதி ஆக்ரா கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள புனித மேரி தேவாலயம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சுமார் நூற்றக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹைதர் அலி ஆவார். ரிக்ஷா தொழிலாளியான இவர், அந்த தேவாலயத்துக்கு வருகை தரும் பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டார்.

ஆனால் அவரின் காதல் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த தேவாலயத்தில் இருந்த சிலைகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியதாக நேற்று போலீஸாரிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x