Last Updated : 08 Apr, 2015 07:15 PM

 

Published : 08 Apr 2015 07:15 PM
Last Updated : 08 Apr 2015 07:15 PM

இந்துத்துவா அமைப்பைத் தொடங்கினார் சுப்பிரமணியன் சுவாமி

புதிய இந்துத்துவா அமைப்பு ஒன்றை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கினார். அந்த அமைப்பு மூலம் இந்துத்துவா பிரச்சினைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

'விராட் ஹிந்துஸ்தான் சங்கம்' எனும் இந்துத்துவா அமைப்பைத் தோற்றுவித்துள்ள சுவாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த அமைப்பு ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் 370 ஒழிப்பது மற்றும் மாட்டிறைச்சியைத் தடை செய்வது உள்ளிட்ட இந்துத்துவா பிரச்சினைகளைக் கையில் எடுக்கும் என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட இந்துத்துவா பிரச்சினைகளில் பா.ஜ.க.வுக்கு இந்த அமைப்பு அழுத்தம் தரும். மேலும் இது சங் பரிவார் அமைப்புடன் சேர்ந்து பணியாற்றும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ராமர் கோயில் பிரச்சினையை கையில் எடுக்க உள்ளோம். இந்தப் பிரச்சினையில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு சரயு நதிக்கரைப் பகுதியில் ஓர் இடத்தை ஒதுக்கிவிடலாம்.

இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் இந்தப் பிரச்சினையில் அரசுக்கு அழுத்தம் தருவது ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அரசியலமைப்புச் சட்டம் 370ஐ ஒழிப்பது. 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் அதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எங்களின் இந்த அமைப்பு இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. இந்து பாரம்பரியத்தை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களுக்கும் இந்த அமைப்பில் இடம் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x