Published : 14 Apr 2015 10:40 AM
Last Updated : 14 Apr 2015 10:40 AM
கர்நாடகத்தில் பெல்லாரி, காலபுர்கி, ரெய்ச்சூர், பீதர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயில் கொளுத்தியதால் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெங்களூரு மட்டு மில்லாமல் ரெய்ச்சூர், கலபுர்கி, சிக்கபளாப்பூர், ராம்நகர், பீதர் என மாநிலத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. நெல், வாழை, கோதுமை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் மின்னல் தாக்கி யதில் ரெய்ச்சூரில் தொழிலாளி விஸ்வநாத் (33), பெலகாவியில் லட்சுமியம்மா (51), ஹாவேரியில் சந்திரசேகரா (42) ஆகியோர் பலியாகினர். இதேபோல சுவர் இடிந்து விழுந்ததில் பீதரில் தீபா (9), கொப்பளில் விஸ்வநாத் (14), பெல்லாரியில் பவானி (8) ஆகியோர் உயிரிழந்தனர். அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT