Last Updated : 05 Apr, 2015 11:31 AM

 

Published : 05 Apr 2015 11:31 AM
Last Updated : 05 Apr 2015 11:31 AM

ஹரியாணா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு ஒரு மாத பரோல்

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஒரு மாத பரோல் அளித்துள்ளார்.

ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தற்போது திகார் சிறையில் 10 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சவுதாலாவுக்கு, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இந்த பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜாமீனில் இருக்கும்போது பிரச்சாரத்தில் சவுதாலா ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x