Published : 19 Apr 2015 12:38 PM
Last Updated : 19 Apr 2015 12:38 PM
மூன்றாவது முறையாக ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு சமீப காலமாக வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படுகிறது. அவர் முதல்வராக பதவி ஏற்றதும், ஹைதராபாத்தில் உள்ள தனது அலுவலகத்தை பல கோடி ரூபாய் செலவழித்து வாஸ்துபடி மாற்றி அமைத்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டை முழுவதுமாக இடிக்க முடிவு செய்தார் சந்திரபாபு நாயுடு. வீட்டை முழுவதும் இடித்து புதிதாக கட்ட சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. அதுவரை அவர் வாடகை வீட்டில் வசிக்க உள்ளார். சீனாவில் இருந்து நேற்று காலை திரும்பி வந்ததும் சந்திரபாபு வாடகை வீட்டுக்கு சென்றார். இவை அனைத்துக்கும் வாஸ்து நிபுணர்களின் யோசனைதான் காரணமென கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT