Published : 12 Apr 2015 09:35 AM
Last Updated : 12 Apr 2015 09:35 AM

என்கவுன்ட்டரை அரசியலாக்கும் தமிழக கட்சிகள்: ஆந்திர வனத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

திருப்பதி வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் விவகாரத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியலாக்குவதாக ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆந்திர சிறப்பு போலீஸ் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, இதுகுறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி, சித்தூர் மாவட்ட ஆட்சியர்ஆகியோருக்கு மத்திய மனித உரிமை ஆணையம் நோட் டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் ஒரு தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கில், இதை கொலை வழக்காக பதிவு செய்யும்படி ஆந்திர போலீஸுக்கு ஆந்திர உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதனால் போலீ ஸாரும் வனத்துறை அதிகாரி களும் தங்களுக்கு சாதகமான சாட்சிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த 7-ம் தேதிக்கு முந்தைய நாள் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பலின் நடமாட்டம் அடங்கிய கண்காணிப்பு கேமராவின் பதிவு கள்மீது ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக பாடுபட்ட மகாத்மா ஜோதிராவ் புலே அவர்களின் 189-வது ஜெயந்தி விழா ஆந்திரா, தெலங்கானாவில் நேற்று நடைபெற்றது.

இதில் சித்தூரில் உள்ள அம்பேத்கர் பவனில் நடந்த விழாவில் மாநில வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். முன்னதாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர்களை நான் எப்போதும் தரக்குறைவாக பேசியதில்லை. அதேநேரம் என்கவுன்ட்டரில் இறந்தவர்களை போலீஸார் விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறுவது தவறு.

செம்மர கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பேரில், கடத்தலை தடுக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால்தான் என்கவுன்ட்டர் செய்ய வேண்டி வந்தது. இதை தமிழக அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் ஆக்குகின்றன.

தற்போது என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் செல்போன் எண்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கடத்தல் காரர்கள் கண்டிப்பாக சிக்குவர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x