Published : 07 Apr 2015 09:08 AM
Last Updated : 07 Apr 2015 09:08 AM

ஆந்திர மாநிலம் குண்டூரில் வாசனை, மசாலா பொருட்கள் பதப்படுத்தும் தொழில் பூங்கா திறப்பு

குண்டூர் மிளகாய்கள் நாட்டின் மிளகாய் உற்பத்தில் 65 சதவீத பங்கு வகிக்கின்றன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வங்காயலபாடு கிராமத்தில் நறுமணப் பொருட்கள் தொழிற்பூங்காவை திறந்து வைத்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

நாடு முழுவதும் சமையலுக்குப் பயன்படும் 109 வகை நறுமண, மசாலா பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இவற்றை உரிய சமயத்தில் பதப்படுத்தினால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாது. எனவே, குண்டூரில் 124 ஏக்கர் பரப்பளவில் பதனிடும் 18 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும், மிளகாய், மிளகு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் உள்ளிட்டவற்றை இதன்மூலம் குறைந்த செலவில் பதப்படுத்தலாம். இதற்காக 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு முன் வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குண்டூர் விவசாயிகள் மிளகாய்க்கு சர்வதேச அளவில் பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளனர். நாட்டில் உற்பத்தி ஆகும் மிளகாய்களில் 65 சதவீதம் குண்டூர் மிளகாய்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x