Last Updated : 19 Apr, 2015 10:11 AM

 

Published : 19 Apr 2015 10:11 AM
Last Updated : 19 Apr 2015 10:11 AM

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 60% வாக்கு பதிவு: ஆளும் கட்சி மீது வன்முறை புகார்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின.

கொல்கத்தா மாநகராட்சியின் 144 வார்டுகளுக்கு நேற்று தேர் தல் நடைபெற்றது. மாநில முதல் வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வாக்க ளித்தனர். இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தல் அரையிறுதி யாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி சப்யாசச்சி கோஷ் கூறும்போது, “கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் 3 மணியுடன் முடிவடைந்தன. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின. எனினும், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர்” என்றார்.

இந்தத் தேர்தலில் எப்படி யாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு மையங் களில் ஆளும் கட்சி வன் முறையை கட்டவிழ்த்துவிட்டதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஆனால் இந்தக் குற்றச் சாட்டை ஆளும் திரிணமூல் காங் கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளரும் மாநில கல்வி அமைச்சரு மான பார்த்தா சாட்டர்ஜி தெரிவித் துள்ளார். மேலும் தேர்தல் அமைதி யாகவும் சுதந்திரமாகவும் நடை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் குற்றச் சாட்டு குறித்து மாநில தேர்தல் ஆணையர் எஸ்.ஆர்.உபாத்யாய் கூறும்போது, “தேர்தல் தொடர் பாக பல்வேறு புகார்கள் வந்துள் ளன. தேர்தல் அமைதியாக நடை பெற்றிருந்தால் இவ்வளவு புகார் வந்திருக்காது. எனினும், அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்த பிறகே இது குறித்து கருத்து தெரிவிக்க முடி யும்” என்றார். கொல்கத்தா மாநகர காவல் துறை ஆணை யர் சுரஜித் கர் புர்காயஸ்தா கூறும் போது, “ஒருசில அசம்பாவிதங் களைத் தவிர தேர்தல் அமைதி யாக நடைபெற்றது” என்றார்.

மாநிலத்தில் உள்ள 91 நகராட்சி களுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x